Udaga Santhi is not a routine and has wider perspectives. This is applicable only to the persons who do Vedic Samskaras by following Vedic Suktas like Baudhayana, Apastamba .....
1) Udagasanthi:
Udagasanthi contains a choice selection of the most important mantras of Yajur Veda and includes popular suktams like Pavamana suktam, Nakshatra suktam, Brahma Suktam, Go Suktam, Anna Suktam, Varuna Suktam etc. It is chanted for energising water in the kalasha and is recited during performance of important samskaras like Upanayanam, Seemandam etc. and other religious functions like Sashtiabdhapurthi, Sathabhisekham etc.
ப்ராஹ்மணர்களுக்கு உரியதான ஸம்ஸ்காரங்களிலே சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், அன்னப்ராசனம், சௌளம், உபநயனம் என்கின்றவை மிகவும் முக்யமான ஸம்ஸ்காரம். இந்த ஸம்ஸ்காரங்களுக்கு முன்னாடி உதகசாந்தி பஞ்ச பாலிகை ப்ரதிசர பந்தம் என்கிற ரக்ஷh பந்தனம் நாந்தீ ச்ராத்தம் இவைகளைச் செய்து கொண்டுதான் இந்த ஸத்காரியங்களை நாம் ஆரம்பிக்கவேண்டும்.
சீமந்தம், உபநயனம், மற்றும் சஷ்டிஅப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற காம்ய கர்மாக்களிலும் இந்த உதகசாந்தி என்பதை ஏன் செய்யணும் என்று கேட்டால் ‘அபம்ருத்யு பரிஹாரார்தம் ஸர்வாரிஷ்ட சாந்தியர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் வேதோக்த ஆயு: அபிவ்ருத்யர்த்தம்“ என்று அதற்கு ஸங்கல்பம். அபம்ருத்யு என்பது அகால மரணம், காலத்தில் ம்ருத்யுவை எல்லோரும் ஏற்றுக்கொள்வோம் எதிர்பார்ப்போம்,
‘சதாயு: புருஷ:” என்று வேதோக்தமான ஆயுசு ஒவ்வொருத்தருக்கும் 100 வயசு வேதத்துல சொல்லியிருக்கு, இருக்கறபடி ஒழுங்கா இருந்தா ஒரு வ்யாதியும் வராது 100 ஆயுசு இருந்துட முடியும். அகால ம்ருத்யுவை நீக்கத்தான் அபம்ருத்யு பரிஹாரார்த்தம் என்று ஸங்கல்பம். வாழ்க்கையில வரக்கூடியதான அவக்ரஹங்கள், ஆபத்துகள், துக்கங்கள், வ்யாதிகள், வ்யாஜங்கள் இவையெல்லாம் நிவ்ருத்தி ஆகணும் (இல்லாமல் ஒழியணும்) என்பதற்காகஸர்வாரிஷ்ட சாந்தியர்த்தம் என்றும், தர்மத்திற்கு விரோதமில்லாத அபீஷ்டங்கள் என்றால் ஆசைகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறவேண்டும் என்று இந்த ஸங்கல்பங்கள் உதகசாந்தியில் உள்ளன.
அதற்குத் தேவையான மந்த்ரங்கள் இந்த உதகசாந்தி ஜபத்திலே இருக்கிறது. இதைச் சொன்னவர் போதாயன ருஷி. அதனால்தான் யார் பண்ணினாலும் 'போதாயன உக்த ப்ரகாரேண' அப்டீன்னு சொல்லித்தான் பண்ணுவா.